கடுகு சிறிது காரம் பொரிது! சிறிதான இந்நிருபம் நடைமுறை வாழ்க்கை பிரச்சினைகளைக் குறித்த ஆழமான பார்வையைக் கொண்டது. யரளவு  கிறிஸ்தவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அதனை வாழ்க்கையாக வாழ்ந்து காட்ட அறைகூவல் விடுக்கும் இந்நிருபம் ஒருவருடைய உண்மையான நிலையைக் கண்ணாடியில் காண்பிப்பதுபோல காண்பித்து எச்சரிக்கின்றது. முதிர்ச்சிக்கு வழிகாட்டுகின்றது. உண்மையான தேவபக்தி உயிருள்ள விசுவாசம் உன்னத ஞானம் உள்ளவர்களாய் வாழ்ந்து காட்ட அழைக்கின்றது. இப்படியான நிருபத்தை மேலும் விளங்கிக் கொண்டு வாழ்வில் நடைமுறைப்படுத்துவதற்கும் போதிப்பதற்கும் இப்பாடநெறி உறுதுணையாக அமையும்.