ஒரு பிள்ளை நீந்தக்கூடியதும், யானை நீந்தக்கூடியதுமான ஒரு குளமே யோவானின் சுவிஷேம்” (லியோன் மொிஸ்). சுவிசேஷத்தை வழங்கும் இந்த தனித்துவம் மிகு முறையில், யோவான் எமக்கு வரலாற்று ரீதியான இயேசுவைக் குறித்தும், அவாின் போதனைகளைக் குறித்தும் விலைமதிப்பற்ற அறிவை தருவதை காணலாம். முக்கியமான கிறிஸ்தவ கொள்கைகளை ஆராய்கின்ற அதேவேளை, யோவான் சீஷத்துவதிற்கான ஒரு உறுதியான அழைப்பை விடுக்கின்றாா்.