சாமுவேலின் நூலானது இஸ்ரவேலின் சரித்திரமானது நியாயாதிபதிகளின் காலத்திலிருந்து இராஜாக்களின் காலத்துக்கு மாற்றமடைவதை குறித்து நிற்கிறது. நூலின் வாசகர்கள் ஏலி, சாமுவேல், சவுல், தாவீது போன்றவர்களின் வாழ்விலிருந்து பாடங்களை கற்கலாம். புதிய கட்டமைப்பான முடியாட்சியில் தேவன் எவ்விதம் தன்னுடைய மக்களுடன் ஈடுபாடுகொள்கிறார் என்பதிலிருந்து தேவனுடைய பண்புகளை ஆழமாக புரிந்து கொள்ளலாம்.