"ஏழைகளுக்கு உதவி செய்ய மறக்க வேண்டாம் என்று மட்டும் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்" (கலாத்தியர் 2:10). அண்மைக்காலமாக ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளி தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாக இலங்கையின் கிராமப்புறத்திலும் நகர்ப்புறத்திலும் ஏழை மக்களின் சனத்தொகை பெருகியிருக்கிறது. அநேக குற்றச்செயல்கள், வன்முறைகள் மற்றும் வியாதிகள் போன்ற சமூக சீரழிவுகளுக்கு பெரும்பாலும் வறுமையே ஊற்றாக உள்ளது. இப்பாடநெறியில் வறுமைக்கான மூலகாரணங்கள் ஆராயப்படுவதோடு, அதனை ஒழிப்பதற்கான கிறிஸ்தவ அணுகுமுறைகளும் அறிமுகப்படுத்தப்படும்.