அங்கத்தவர்களின் சாட்சியுள்ள வாழ்க்கைமுறை மூலம் உயிருள்ள தேவவார்த்தையின் வல்லமையை வெளிப்படுத்தக் கூடிய பலமும், செயற்திறனும் மிக்க சிறுகுழுக்களை கட்டியெழுப்புவதற்கு மாணவர்களை ஊக்குவிப்பதும், உதவுவதும் இப்பாடத்தின் நோக்கமாகும். இப்பாடத்தில் ஏன் ஒரு திருச்சபைக்கு சிறுகுழு ஊழியம் அவசியமானது, இதற்கான வேத அடிப்படைகள் மற்றும் உபாயங்கள் எவை, இதனை எவ்வாறு அமைக்க வேண்டும், எப்படி வெற்றிகரமாக முன்கொண்டு செல்வது, ஆண்டவருடைய ஆணையை எப்படி சிறுகுழுவினூடாக நிறைவேற்ற முடியும், இதிலுள்ள சவால்கள் யாவை போன்ற விடயங்கள் ஆராயப்படும்.