நியாயாதிபதிகளின் புத்தகமானது போராட்டம் நிறைந்த இஸ்ரவேலின் வரலாற்று பின்னணியை சார்ந்ததாகும். ஒவ்வொருவரும் தங்களின் பார்வைக்கு சரியானதை செய்தார்கள். வன்முறைகள், தந்திரங்கள் ஏமாற்றம் மற்றும் சாகசம் நிறைந்த காலப்பகுதியாகும். வீரத்தின் அடையாளம் சிம்சோன், இடது கை பழக்கமுள்ள ஏகூத், நழுவும் வீரன் கிதியோன், மேலும் வீரச்செயல்களை செய்த அநேகரைக் குறித்து நாம் அறியலாம். தேவனுக்கு விசுவாசமாய் இருப்பதற்கு நமக்குள்ள சவால்களையும், இப்புத்தகத்தின் மூலம் நமது பெலவீனங்களுக்கு எவ்வாறு முகம் கொடுக்க வேண்டும் என்பதையும் அறிந்துக் கொள்ளலாம்.