பட்டமளிப்பு விழா 2019

பட்டமளிப்பு விழாவின் ஆராதனை மற்றும் நன்றி செலுத்தலை 2019, ஆடி மாதம் 13ஆம் திகதி கொழும்பு 3இல் அமைந்துள்ள மெதடிஸ்த கல்லூரியின் மண்டபத்தில் கொண்டாடியது.

CTSஇன் 25ஆவது ஊழிய நிறைவு கொண்டாட்டத்துடன் இணைந்ததாக காணப்பட்டதால் இந்த நிகழ்வானது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கையின் கிறிஸ்துவிற்காக இளைஞர் அமைப்பின் கற்பித்தல் இயக்குநரும், CTSஇன் தலைமை ஸ்தாபகருமான அஜித் பெர்ணான்டோ கலந்து கொண்டார். கிறிஸ்தவ கல்விக்கான சான்றிதழுக்கு பதினான்கு மாணவர்கள் ,ஆலோசனைப்பணியில் உயர் சான்றிதழுக்கு மூன்று மாணவர்கள், இறையியல் பட்டச்சான்றிதழுக்கு ஒரு மாணவர், இளமாணிப்பட்ட சான்றிதழுக்கு பதினாறு மாணவர்கள், முதுமாணிப்பட்ட சான்றிதழுக்கு (வேதாகம கல்வி) மூன்று மாணவர்கள் உள்ளிட்ட முப்பத்தியேழு மாணவர்கள் 2019இற்கான பட்டங்களை பெறுவதற்கான தகைமை பெற்றிருந்தனர். தற்போதைய மற்றும் முன்னைய மன்ற உறுப்பினர்கள், கல்விப்பீடம் மற்றும் நிர்வாகத்தினர், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள், சபைப்பிரிவு தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு கடந்து வந்த ஆண்டுகளுக்காகவும், தேவனுடைய இராஜ்யத்திற்கு மீள் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்கும், ஊழியம் செய்வதற்கும் பங்குகொள்ள செய்த தேவனின் கிருபைக்கு நன்றி செலுத்தினர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழைய மாணவர்கள் உள்ளிட்ட மாணவர்கள், 5 மாகாணங்களில் கல்வி நிலையங்கள், நூற்றுக்கும் அதிகமான முக்கியமான வெளியீடுகளையும் தன்னகத்தே கொண்டு, இலங்கையிலுள்ள திருச்சபைகளுக்கு விசுவாசத்தில் உறுதிப்படவும், ஊழியம் மற்றும் பணிநோக்கில் திறனாக செயற்படுவதற்கும், CTS தன்னை அர்ப்பணித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்