விசுவாசம் மிக்க சேவையின் மைல் கற்களை அடையாளப்படுத்தல்
இவ்வருடம் வைகாசி மாதம் 31-ம் திகதியோடு CTS தனது 30 வருட சேவையை பூர்த்தி செய்தது. 1994-ல் இலங்கை வேதாகமக்கல்லூரியின் ஒரேயொரு பிரிவாக தனது செயற்பாடுகளை ஆரம்பித்த CTS-ஆனது 1997-ல் கொஹுவலையில் அமையப்பெற்ற தனது சொந்த வளாகத்திற்கு இடம்பெயர்ந்தது. அவ்வருடமே அதன் முதலாவது பட்டமளிப்பு இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 30 ஆண்டுகளில் CTS தலைமையகமானது பல முக்கியமான மைல் கற்களை கொண்டாடியுள்ளது. CTS மீதான கடவுளின் தயவோடும், ஆசீர்வாதத்தோடும் இம்மைல் கற்களை கொண்டாடும் இத்தருணத்தில் இந்நினைவுப்பாதையில் எம்மோடு இணைந்து நடக்கும்படியாக உங்களையும் அழைக்கின்றோம்.