அங்கீகாரம்

தேவ ஊழியத்திற்கான அர்ப்பணிப்பினை கொண்டுள்ள கிறிஸ்தவர்கள் CTS இல் கல்வியை மேற்கொள்ளவோ அல்லது CTS இன் பங்காளராகவோ இணைவதற்கு காரணமாக எமது நம்பகத்தன்மை ஏதுவாகிறது. இறையியல் கல்லூரியானது தற்போது இருபத்தைந்து ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது.

  • எமது பாடத்திட்டங்கள் யாவும் உலகில் இறையியல் கல்விக்கான தலைசிறந்த அங்கீகாரம் அளிக்கும் நிறுவனமான ஆசிய இறையியல் சங்கத்தின் (ATA) அங்கீகாரம் கொண்டது. 
  • நாம் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ கூட்டணி (NCEASL) மற்றும் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் (NCCSL) ஆகியவைகளில் உறுப்புரிமை பெற்றுள்ளோம். இவ்விரு அமைப்புகளின் ஆளுனர் மன்றத்தில் CTSஆனது பணியாற்றுகிறது.
  • 2015 ஆம் ஆண்டில் Overseas Council International மற்றும் Scholar Leaders இன் உயர் கௌரவமிக்க இன்றியமையாத நிலைகொள் முயற்சியான்மை (VSI) இன் சர்வதேச மன்றத்தில் பங்கேற்பதற்காக ஏறத்தாழ 200 இறையியல் கல்லூரிகளிலிருந்து CTS தெரிவு செய்யப்பட்டது.
  • வேதாகம சத்தியத்திற்கும், விசுவாசத்திற்கும் ஒரு சீரான மற்றும் உணர்வுபூர்வமான அர்ப்பணிப்புடன் CTS கல்விப்பீடமானது கிறிஸ்தவ மரபுகள் மற்றும் அனுபவங்களின் பிரம்மிப்பூட்டும் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகிறது.