எதற்காக CTS?
நீங்கள் ஆண்டவருடைய வார்த்தையை ஆழமாக கற்றுக்கொள்ள வேண்டுமென்று ஆணடவர் உங்களை உந்துவதை உணர்கிறீர்களா? வாழ்வில் ஏற்படும் சில பிரச்சனைகளுக்கு ஓர் ஆழமான தீர்வு தேவைப்படுகின்ற சூழ்நிலைகளுக்கு நீங்கள் முகம் கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்களா? ஊழியத்தில் மும்முரமாக ஈடுபடும் இத்தருவாயில் ஆண்டவருடைய காரியங்களில் ஆழமாக ஈடுபட வேண்டுமென்கிற உணர்வை பெற்றுக்கொண்டிருக்கிறீர்களா?
நீங்கள் ஆண்டவரை இன்னும் அதிகமாக அறிந்து அவர் அழைக்கும் எவ்விடத்திலும் ஊழியம் செய்ய விரும்பும் ஓர் கிறிஸ்தவராக இருந்தால் உங்களை போன்றவர்களுக்காகவே, CTS உள்ளது. CTS இல், நீங்கள் பல பிரிவுகளை சேர்ந்த சக விசுவாசிகளின் கூட்டுறவில் வளரலாம்; கடவுளின் வார்த்தைக்கும் அவருடைய மக்களுக்கும் அர்ப்பணித்த ஆசிரியர்களிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளலாம்; மேலும், பவுல் கூறுவதைப்போல, ‘உங்களை அங்கீகரிக்கப்பட்ட ஒருவராக வெட்கப்படாத, சத்திய வார்த்தையை நிதானமாய் பகுத்து போதிக்கும் ஒரு ஊழியக்காரனாக கடவுளிடம் உங்களை நிலை நிறுத்த உங்களால் முடிந்ததை செய்யுங்கள்.’ (2 தீமோ.2:15).
உங்களை CTS இற்கு வரவேற்க நாங்கள் ஆவலாயுள்ளோம் : உங்கள் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பது எங்கள் பாக்கியமாக உள்ளது. தீர்மானியுங்கள். முயற்சியை மேற்கொள்ளுங்கள். ஆழமாக வளருங்கள்.
CTS இன் பாடத்திட்டங்கள்
நீங்கள் உங்களது தனிப்பட்ட விருப்பத்தின்படி பாட நெறிகளை தெரிவு செய்தாலும் கூட , ஆகக்கூடிய பயனை பெற்றுத்தரக்கூடிய வகையில் கொழும்பு இறையியல் கல்லூரி வழங்கும் ஒரு கற்கைநெறிக்கு உங்களை பதிவு செய்து கொள்வதை குறித்து சிந்திக்கும்படி நாம் உங்களை உற்சாகப்படுத்துகிறோம். கொழும்பு இறையியல் கல்லூரி ஐந்து மட்டங்களில் கற்கைநெறிகளை வழங்குகின்றது. இவை அனைத்தும் ஆசிய இறையியல் சங்கத்தினால் (Asia Theological Association) அங்கீகரிக்கப்பட்டவையாகும். உங்களுக்கு அதிகளவு பயனை தரக்கூடிய கற்கை நெறி எதுவென்பதை கண்டறியுங்கள்:
Certificate in Christian Studies: Children’s Ministry
Designed to equip effective Children’s Ministry Workers f
மேலும் வாசிக்கவும்