முதுகலைப்பட்டம்

இக்கற்கை நெறியானது சபைக்கான பிரசங்கிமார்கள், ஆசிரியர்கள், மற்றும் எழுத்தாளர்களை வலுவூட்டுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இம்முதுமாணி கற்கையானது, நாட்டை விட்டு வெளியேறாமல் சர்வதேச புலமைப்பரிசில்களின் தரங்களுக்கமைய பயனடைய வாய்ப்பை வழங்கும் வகையில் அல்லது வேலை மற்றும் / அல்லது ஊழியத்திலிருந்து இடை நிறுத்தாது முதுநிலை மட்டத்தில் கல்வியை தொடர உள்ளுர் மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. கற்கைகளுக்கு அதிக அளவு அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு அவசியமானாலும், அவை இன்றைய நடைமுறை கிறிஸ்தவர்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. வார நாட்களில் மாலை மற்றும் சனிக்கிழமைகளில் வகுப்புகள் இடம்பெறும் அதேவேளை, மாணவர்கள் வருடத்தில் எந்த காலப்பகுதியிலும் இணைந்து கொள்ளலாம். முதுமாணி கற்கைநெறிகள் குறிப்பாக இறையியல் பட்டதாரிகள், திருச்சபை தலைவர்கள் மற்றும் சந்தைவெளிகளிலுள்ள (ஊழியத்தேவையுள்ள) கிறிஸ்தவர்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் அவை சபைக்கான பிரசங்கிமார்கள், ஆசிரியர்கள், மற்றும் எழுத்தாளர்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளதுடன், இலங்கை திருச்சபைகளுக்கு, வேதாகமம் மற்றும் அதன் கலாச்சார சூழலில் நேர்மையுடன் ஈடுபட உதவுவதற்காக தலைமைத்துவத்தை வழங்குகின்றன. முதுமாணி கற்கைநெறிக்கு இறையியல் பட்டம் பெற்ற மாணவர்கள் 30 புள்ளிகளையும் இறையியல் பட்டம் பெறாத மாணவர்கள் 60 புள்ளிகளையும் பெற்றிருப்பது அவசியமானது. அனைத்து முதுமாணி மாணவர்களும் அவர்கள் தேர்ந்தெடுத்த பிரிவில் ஒரு ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்க வேண்டும்.

MA Brochure 2025

ஆற்றுப்பணியில் முதுகலைப்பட்டத்திற்கான சிற்றேடு