CTS கல்விப்பீடம்

img

ஐவோ பூபாலன்
முதல்வர்
BA (Hons), ThM, PhD
CTSஇன் முதல்வர். இலண்டன் இறையியல் கல்லூரியின் பட்டதாரியும், அமெரிக்காவின் டிரினிட்டி இவான்ஜலிக்கல் டிவினிட்டி கல்லூரியில் செமிட்டிக் மொழிகள் மற்றும் பழைய ஏற்பாட்டில் இறையியல் முதுகலைப்பட்டத்தையும் தென்னாபிரிக்காவின் Cape Town பல்கலைக்கழகத்தில் சமய கற்கைகளுக்கான முனைவர் பட்டத்தையும் பெற்றவர். கொள்ளுப்பிட்டி மெதடிஸ்த திருச்சபையில் தலைமைத்துவ அங்கத்தினராகவும், பிரசங்கித்தல், வாலிபருக்கான வழிகாட்டுதல் மற்றும் ஓய்வுநாள் பாடசாலையில் 13-17 வயது பிரிவினருக்கு கற்பித்தலுள்ளிட்ட பிரதான ஊழியங்களுடன் Lausanne அமைப்பின் இறையியல் பணிக்குழுவின் இணைத் தலைவராகவும் ஊழியம் செய்கிறார்.

ரவீன் கல்தேரா
கல்விப்பீடாதிபதி
DipAgri, BTh, BA, MA
CTSஇன் கல்விப்பீடாதிபதி. இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மற்றும் CTSஇன் பட்டதாரி. Dallas இறையியல் கல்லூரியில் வேதாகம கற்கைநெறியில் முதுகலைப்பட்டத்தை பெற்றுள்ளதுடன் பல்தரப்பட்ட ஊழியங்களை ஆரம்பிப்பதில் பல வருட அனுபவம் வாய்ந்தவர். பண்டைய மத்திய கிழக்கு மற்றும் வேதாகம புவியியல் பற்றிய அறிவில் சிறப்பு வாய்ந்தவராதலால் இலங்கை வெளியீடுகள் பலவற்றில் வரைபடங்களுக்கான பிரதான வளவாளராக விளங்குகிறார். வாழும் கிறிஸ்து திருச்சபையின் திருநிலைப்படுத்தப்பட்ட ஊழியராவார்.

மனோ இம்மானுவேல்
கல்வி முன்னேற்றத்திற்கான தலைவர்
FCCA, BTh, MA, PhD
CTSஇன் கல்வி முன்னேற்றத்திற்கான தலைவர். இலண்டன் இறையியல் கல்லூரியின் பட்டதாரி. பட்டப்படிப்புகளுக்கான ஆசிய இறையியல் கல்லூரியின் (பிலிப்பைன்ஸ்) சமாதான கற்கையில் முனைவர் பட்டத்தை பெற்றவர். உள்ளுர் மெதடிஸ்த திருச்சபையில் பிரசங்கியாளர். விசுவாசத்திற்கான புரிந்துணர்வு: கிறிஸ்தவ கோட்பாடுகளுக்கான அறிமுகம் நூலின் எழுத்தாசிரியர். CTSஇன் முன்னாள் கல்விப்பீடாபதியும், இலண்டன் வெஸ்ட் என்ட் இன் முன்னாள் கணக்கியலாளராக பணியாற்றியவருமாவார்.

ஜேசன் செல்வராஜா
BTh
கைதடி, AOG திருச்சபையில் தலைமைப்போதகர். ‘Simply mobilizing SL’ இன் தேசிய இணைப்புக்குழுவின் அங்கத்தவராகவும், சிவில் உரிமை அமைப்பாகிய யாழ்ப்பாணம் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் அங்கத்தவராகவும் அங்கத்துவம் வகிக்கிறார்.

ஈன்ஸ்டின் பெர்ணான்டோ
HND (Counselling), BTh, PgDip (BAPC)
CTSஇன் பட்டதாரி. நீர்கொழும்பு கொச்சிக்கடையின் கித்து செவன ஊழியங்கள் திருச்சபையில் உதவிப்போதகராகவும், போதகராகவும் அதிக ஆண்டுகளாக ஊழியம் செய்துள்ளதுடன், கித்து செவன சீஷத்துவ பயிற்சி நிலையத்தின் ஆசிரியராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் உதவி முதல்வராகவும் சேவையாற்றியுள்ளார். ஆற்றுப்பணி ஊழியத்தில் ஈடுபட்டு வருவதுடன், இலங்கை மன்ற கல்லூரியில் ஆற்றுப்பணிக்கான உயர் தேசிய பட்டச்சான்றிதழை பெற்றவர். கித்து செவன திருச்சபையின் அங்கத்தவர்.

சனத் அத்துகோரள
BSc, BTh, MA, PhD
CTSஇன் ஆவிக்குரிய உருவாக்கத்தின் ஒருங்கிணைப்பாளர். CTSஇன் பட்டதாரியும், ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக்கத்தின் உயிரியல் விஞ்ஞான பட்டதாரியும், தென்கொரியாவின் டோர்ச் டினிட்டி கிராஜுவேட் பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவ கல்வியில் 2017இல் முதுகலைப்பட்டத்தையும் 2020இல் கல்வி கற்கையில் முனைவர் பட்டத்தையும் பெற்றவர். கற்பித்தல் மற்றும் ஊழியத்தில் 20 வருடத்திற்கும் மேலாக அனுபவம் வாய்ந்தவர். All Nations திருச்சபையில் அங்கத்துவம் வகிக்கிறார்.

திலீப் குணவீர
BTh
CTSஇன் பட்டதாரியும், அதன் வட மத்திய மாகாண கல்வி நிலையத்தின் ஒருங்கிணைப்பாளருமாவார். முன்னர் கல்வாரி திருச்சபையின் ஹங்வெல கிளையின் உதவிப்போதகராகவும், மொரட்டுவ கிளை சிங்கள பிரிவின் போதகராகவும் ஊழியம் செய்துள்ளார். தற்போது அனுராதபுரத்தில் உள்ள இலங்கை திருச்சபையில் பொதுநிலை பிரசங்கியாளராகவும், தலைவராகவும் ஊழியம் செய்கிறார்.

செல்லதுரை ஜோண்சன் சந்திரசேகர்
BTh
CTSஇன் பட்டதாரி. கல்லூரியின் கல்விப்பீடத்தின் இணைநிலை உறுப்பினராக பல ஆண்டுகளாக சேவையாற்றுவதுடன், தமிழ்மொழியிலமைந்த மாகாண கல்வி நிலையங்களில் கற்பித்தலில் பல வருட அனுபமுள்ளவர். 20 வருடங்களுக்கும் மேலாக சீயோன்மலை கூடார சபையின் தலைமைப்போதகராக விளங்குகிறார். கொரிய சர்வதேச இறையியல் கல்லூரியில் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் கிறிஸ்தவம் என்ற பாடநெறியில் சான்றிதழை பெற்றவர். வடகொழும்பு போதகர் ஐக்கியத்தின் செயலாளர் நாயகமாகவும் சேவையாற்றுகிறார்.

இராஜாராம் ஹரிஹரன்
BTh, MMin
CTSஇன் மாகாண கல்வி நிலையங்களின் முகாமையாளர். திரித்துவ இறையியல் கல்லூரியின் (சிங்கப்பூர்) பட்டதாரியான இவர், மிக நீண்ட காலமாக வாலிப ஊழியங்களை செய்துள்ளதுடன், உள்நாட்டு போர் காலப்பகுதியில் வட மாகாணத்தில் வாழ்ந்தவரானயிவர் YFCஇன் மும்மொழி ஊழிய அனுபவத்தை கொண்டவர்.

நத்தானியேல் சோமநாதன்
BEng, MA
உவீட்டன் கல்லூரியில் (அமெரிக்கா) வரலாற்று இறையியலில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தெகிவளை கிறிஸ்தவ எழுப்புதலின் திருச்சபையில் இணைப்போதகராக ஊழியமாற்றுகிறார். சபை தலைவர்களின் வினைத்திறனான ஊழியத்திற்கு தகுந்த பயிற்சிகளையும் வளங்களையும் வழங்குவதோடு‚ இறையியல் கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்துவது இவரது முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. தற்போது பெர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான கற்கையில் ஈடுபட்டுள்ளார்.

பெர்னாட் கொஸ்தா
BTh, MDiv, STM
இந்தியாவில் சி.ஓ.டி.ஆர். இறையியல் கல்லூரி, சர்வதேச பட்டப்படிப்புகளுக்கான கல்லூரி (பிலிப்பைன்ஸ்) ஆகியவற்றின் பட்டதாரி. இலங்கை வேதாகம கல்லூரியின் பட்டதாரி பட்டப்படிப்பிற்கான முன்னாள் கல்விப்  பீடாதிபதி. திருச்சபைகளில் பல்வேறு மட்டங்களில் காணப்படும் தலைமைத்துவங்களை கட்டியெழுப்புவதில் ஈடுபாடுள்ளவர். கல்வாரி திருச்சபையில் அங்கத்துவம் வகிக்கிறார்.

ஜூலியன் தேவதாசன்
BTh, MDiv
தென்கொரியா ACTS இன் பட்டதாரியாவார். கிறிஸ்துவின் ஸ்தானாதிபதிகள் என்ற சர்வதேச அமைப்பின் ஊழிய உறுப்பினராக திகழ்கின்றார். சிலாபம், புனித யாக்கோபின் திருச்சபையை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளதுடன், ஹாகாய் தேசிய வசதிதருனரும் மற்றும் இலங்கை திருச்சபை - கொழும்பு மறைமாவட்டத்தின், கிறிஸ்தவ கல்வி மன்றத்தின் வளவாளருமாவார்.

இணை/ வருகைதரு விரிவுரையாளர்கள்

வனஜா ராஜ்குமார்
BTh
கொழும்பு இறையியல் கல்லூரியின் உதவி நூலகவியலாளராகவும், வடகொழும்பு நிலையத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். அத்துடன் கொழும்பு இறையியல் கல்லூரியின் கல்விப்பீட உறுப்பினருமாவார். அத்துடன் பெண்கள் மற்றும் சிறுவர் ஊழியங்களில் ஈடுபட்டு வருவதுடன், இலங்கை வேதாகம சங்கத்தின் ‘Master Facilitator in Healing the Wounds of Trauma Children’ பயிற்சியை பெற்றவரும், 'தாயின் வடிவமைப்பு" என்பதின் சிரேஷ்ட வளவாளருமாவார். சத்திய வசனம் நிறுவனத்தின் தமிழ்ப்பிரிவு நிர்வாக ஒருங்கிணைப்பாளராக நான்கு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இவர், கொழும்பு-13, ஜிந்துப்பிட்டி, புனித தோமாவின் ஆலயத்தினை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளார்.

கிறிஸ்துமணி செல்லையா
DipEng (Mech), BTh, MA
கொழும்பு இறையியல் கல்லூரியின் பட்டதாரியான இவர் Campus Crusade நிறுவனத்தின் பல்கலைக்கழக ஊழியத்தின் நிதி முகாமையாளராகவும், சபை ஸ்தாபித்தல் இயக்கத்தின் இணைப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். நீண்ட காலமாக முழுநேரப்பணியில் ஈடுபட்டு வரும் இவர் தற்பொழுது இரட்சணியசேனை சபையின் கல்வி இணைப்பாளராகவும், சபைகளில் சீஷத்துவ பயிற்சியளித்தல், கற்பித்தல், பிரசங்கித்தல், வேதாகம கல்லூரிகளில் கற்பித்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கொழும்பு, கொம்பனித்தெரு, இரட்சணியசேனை திருச்சபையை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளார்.

கிறிஸ்ரி பாலேந்திரன்
BD, Certificate in Counselling CWR-UK, MA (candidate)
இவர் சேராம்பூர் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியும், சர்வதேச வேதாகம கழகத்தின் இலங்கைக்கான இயக்குனருமாவார். கற்பித்தல் பணியில் நீண்ட கால அனுபவமுடையவரும், பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியரும் ஆவார். இவர் மூர் வீதியிலுள்ள மெதடிஸ்த திருச்சபையை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளார்.

மகேஸ்வரன் மாணிக்கராஜா
BTh
கொழும்பு இறையியல் கல்லூரியின் பட்டதாரியான இவர் கொழும்பு, மக்கள் தேவ சபையினை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளதுடன், அதன் போதகராகவும் பணியாற்றி வருகின்றார்.

காமினி ஜயந்த
BTh
கொழும்பு இறையியல் கல்லூரியின் பட்டதாரியும், வடகொழும்பு கல்வி நிலையத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பாளருமான இவர், Ragama, Thuduwegedera இலுள்ள Prayer Tower Church இனை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளதுடன், வேதாகம ஆசிரியராகவும் அங்கு கடமையாற்றுகிறார். இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று வேத பாடங்களையும்; பிரசங்கங்களையும் பண்ணுவதுடன்; போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளவர்களை புனரமைக்கும் சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். அத்துடன் கொழும்பு இரட்சணியசேனை மற்றும் தெமட்டகொட Kings Bible School இலும் வேதாகம ஆசிரியராக கடமை புரிகிறார்.

கிறிஸ்டி சாமுவேல்
BE (Comp Sci), MA, EPCM
Mission to Asia (இந்தியா), Infinity Centre for Higher Studies (இலங்கை) ஆகியவற்றின் ஸ்தாபக இயக்குனராவார். இந்தியாவின், எம்.கே பல்கலைக்கழகம் (கணணி விஞ்ஞான தொழிநுட்பவியல் [BE]), புனித. பவுல் இறையியல் கல்லூரி (பிரயோக இறையியலில் முதுமாணி), மார்ட்டின் லூத்தர் பல்கலைக்கழகம் (கிறிஸ்தவ முகாமைத்துவ கற்கைநெறி) போன்றவற்றில் பட்டம் பெற்றவராவார். தெற்காசியாவின் பல்தரப்பட்ட திருத்தூதுப்பணி செயற்பாடு அமைப்புகளின் உறுப்பினரும், இலங்கையில் தகவல் தொழில்நுட்ப கைத்தொழில் அமைப்பு நிர்வாகக்குழுவின் அங்கத்தவருமாவார் (கல்விப்பிரிவு). வெள்ளவத்தை, மூர் வீதியில் அமைந்துள்ள மெதடிஸ்த திருச்சபையை தனது ஆராதிக்கும் சபையாக கொணடுள்ளார்.

நெப்போலியன் பத்மநாதன்
BTh, MTh
கொழும்பு இறையியல் கல்லூரியின் இணைக்கல்வியின் முன்னாள் முகாமையாளராகவும் கல்விப்பீட உறுப்பினராகவும் பணியாற்றிய இவர் இக்கல்லூரியின் பட்டதாரியுமாவார். ஐக்கிய இராஜ்ஜிய வேல்ஸ் தேசத்து Glamorgan பல்கலைக்கழக முதுமாணி பட்டத்தை பெற்ற இவர், தற்போது கற்பித்தல் மற்றும் பிரசங்கப்பணியில் ஈடுபட்டு வருகிறார். காலிமுகம், கிறிஸ்துநாதர் ஆலயத்தினை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளார்.

ஜெயசீலன் ஜோயல் டிரோன்
BTh
கொழும்பு இறையியல் கல்லூரியின் பட்டதாரி. தனியார் கூட்டுறவு துறையில் 5 வருடங்களிற்கு மேலாக தொழில் புரிந்தவர். அநேக வருடங்களாக கொழும்பு சுவிசேஷ கூடார சபையில் வாலிபர் ஐக்கியத்தின் தலைவராகவும் போதகர் குழுவின் அங்கத்தவராகவும் பணிபுரிந்துள்ளார். தற்போது திருகோணமலை பகுதியில் உள்ள கிறிஸ்தவ அருட்பணி சபையினை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளதுடன், அதன் கிளைப் போதகராகவும், ஆசிரியராகவும் பணியாற்றுகிறார்.

எஸ். கதிரேசப்பிள்ளை
BD, MTh
இவர் கல்குடா சுவிசேஷசப்பயிற்சி நிலையத்தின் அதிபராகவும் மெதடிஸ்த சபையின் வடகிழக்கு பிரதேச தலைவராகவும், திருப்பேரவை காரியதரிசியாகவும் கடமை ஆற்றியுள்ளதுடன் நீண்டகாலமாக மெதடிஸ்த திருச்சபையினை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளதுடன், அதன் போதகராகவும் பணியாற்றி வருகின்றார்.

ம. தர்ஷன்
BTh
கொழும்பு இறையியல் கல்லூரியின் பட்டதாரியான இவர், யாழ் கல்வி நிலையத்தின் நிர்வாக இணைப்பாளராக பணியாற்றி வருகிறார். சரசாலை, தேவ சபையினை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ள இவர், அதன் போதகராக சேவையாற்றுவதுடன், வாலிபர்கள் மத்தியில் தேவ பணியை மேற்கொண்டும் வருகிறார்.

கே. யாபேஸ்
BTh
கொழும்பு இறையியல் கல்லூரியின் பட்டதாரியான இவர் AOG திருச்சபையினை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளதுடன், அதன் போதகராக பணியாற்றுகிறார். திருச்சபைகளில் கற்பித்தல், பிரசங்கித்தல் தலைமைத்துவ பயிற்சியளித்தல் போன்றவற்றோடு வேதாகம கல்லூரியிலும் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

சுரேஷ் அப்பாத்துரை
BTh, MA
செரம்பூர் வேதாகம கல்லூரியினதும் சிங்கப்பூர் வேதாகம கல்லூரியினதும் பட்டதாரியான இவர் ஹெப்ரோன் வேதாகம ஊழியத்தின் ஸ்தாபக தலைவரும், அவானா சிறிலங்காவின் தேசிய இணைப்பாளருமாவார். கொள்ளுப்பிட்டி, மெதடிஸ்த திருச்சபையை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளார்.

வி. கிறிஷாந்தி சந்திரசேகர்
Dip (Counseling), BTh
கொழும்பு இறையியல் கல்லூரியின் பட்டதாரியும், சமூக அபிவிருத்தி தேசிய நிறுவனத்தின் (National Institute of Social Development) ஆற்றுப்பணியில் பட்டச்சான்றிதழை பெற்றவருமான இவர், குடும்பங்கள் மத்தியிலே ஆற்றுப்பணியிலே ஈடுபட்டு வருகிறார். வத்தளை, சீயோன்மலை கூடார திருச்சபையை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளதுடன், அதன் நிர்வாக சபையின் காரியதரிசியாகவும், ஞாயிறு பாடசாலை கண்காணிப்பாளராகவும், தெமட்டகொட, கிரேஸ் வேதாகம நிறுவனத்தின் வேதாகம கல்வி ஆசிரியராகவும் கடமையாற்றுகின்றார்.

ஆ. பிரேம்குமார்
BTh, BSc
(ச்)சிசெல் (Chisel) (உளி) என்ற நிறுவனத்திற்கு தலைமைத்துவம் வழங்குகிறார். இவர், சத்திய வசனம் நிறுவனத்தில் 23 வருடங்களும், சுதேச அருட்பணி ஸ்தாபனமான குளோபல் இம்பேக்ட் அருட்பணி ஊழியத்தின் நிர்வாக இயக்குனராக ஏறத்தாழ 15 வருடங்களும் பணியாற்றியுள்ளார். இவர் 24 தமிழ் கிறிஸ்தவ நூல்களின் ஆசிரியருமாவார். அவற்றில் 11 நூல்கள் சிங்கள மொழியிலும் ஒரு நூல் ஹிந்தி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவர் தென்னாசிய அருட்பணி முன்னேற்ற வலையமைப்பின் (SAMA) ஒருங்கிணைப்பாளராகவும் சிம்ப்லி மொபிலைசிங் (Simply Mobilizing) இயக்கத்தின் இலங்கை ஒருங்கிணைப்பாளராகவும் செயற்படுகிறார்.

ப. காந்தன்
BTh, MSW
கொழும்பு இறையியல் கல்லூரியின் இளமாணி பட்டதாரியான இவர், தேசிய சமூக நிறுவனத்தில் உளவளத்துணை பட்டச்சான்றிதழினையும் நிறைவு செய்து, தற்போது சமூகப்பணிக்கான முதுமாணியினை தொடர்கின்றார். 20 வருடங்களாக கிறிஸ்துவுக்காக இளைஞர் அமைப்பில் பணியாளராகவும் தேவனின் பணியை தொடர்கின்றார்.

ராம் ஆறுமுகம்
BTh
கொழும்பு இறையியல் கல்லூரியின் பட்டதாரியான இவர் வர்த்தக துறையில் 25 வருடங்களுக்கு மேலாக கணக்காளராகவும் நிர்வாகியாகவும் கடமையாற்றியதுடன், கொழும்பு மக்கள் தேவசபையினை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டு 30 வருடங்களாக அதின் போதகராகவும் பணியாற்றி வருகின்றார்.

Subscribe Newsletter

To get more updates subscribe to our newsletter
English